ஷுட்டிங் தொடங்குவதற்கு முன்பே கோடிகளில் பிசினஸ் ஆன அஜித்தின் டேர் டெவில் திரைப்படம்…

Author:



டேர் டெவில்

கடந்த வருடம் அஜித்தின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடைசியாக வெளியாகி இருந்தது. அந்த படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது, வசூலில் மாஸ் கலெக்ஷன் செய்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் த்ரியா நாயகியாக நடிக்க அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் கடந்த வருடத்தின் ஹிட் படங்களில் லிஸ்டில் அமைந்தது.

இப்படத்திற்கு பிறகு அஜித் படங்களில் நடிக்க கமிட்டாகவே இல்லை, மாறாக அவர் கார் ரேஸில் செம பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தான் அஜித்தின் 64வது படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

ப்ரீ பிசினஸ்

அஜித்தின் 64வது படம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. அதாவது அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் இப்படத்தை தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

டேர் டெவில் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் படத்தின் ப்ரீ பிசினஸ் சூடு பிடிக்க நடந்துள்ளது.

தமிழ்நாடு தியேட்டர் உரிமை ரூ. 60 கோடி, ஓடிடி உரிமை ரூ. 40 கோடி மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ. 30 கோடி வரை விலை போனதாக கூறப்படுகிறது. மொத்தமாக படத்தின் ப்ரீ- பிசினஸ் மதிப்பு ரூ. 175 கோடி முதல் ரூ. 185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.



Movie News