
நடிகர் பிரதீப் ராவத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வில்லன் நடிகராக கலக்கி வந்தவர். குறிப்பாக அவர் கஜினி படத்தில் நடித்து இருந்தது தற்போதும் ரசிகர்கள் அதிகம் பாரட்டும் ஒன்றாகும்.
தற்போது பிரதீப் ராவத் திடீரென மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.
மரணம்
73 வயதாகும் பிரதீப் ராவத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சற்றுமுன் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.