
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை.
பெண்கள் எழுச்சி பற்றிய கதை என ஆரம்பத்தில் இயக்குனர் சொன்னார், ஆனால் கதை செல்லும் விதம் பார்க்கும் போது வில்லன்களின் எழுச்சியாக தான் கதை உள்ளது. கதை இப்படி செல்கிறதே என ரசிகர்கள் பலரும் நிறைய புலம்பிவிட்டார்கள், ஆனால் இயக்குனர் திருச்செல்வம் கேட்பதாக தெரியவில்லை.
நாளுக்கு நாள் வில்லன்கள், ஆண்கள் ராஜ்ஜியமாக கதை நகர்ந்து வருகிறது. பெண்களை அடிமைப்படுத்தி குணசேகரன் என்ற வில்லனை இதுநாள் வரை கெத்தாக வாழ வைத்த இயக்குனர் இப்போது ராவணனை சேர்த்துள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஒரு நபர் வீட்டிற்கு வந்து ஜனனி என்பவரின் பேச்சைக் கேட்டு மதிவதனி என்பவர் என்னை மிரட்டுகிறார் என ஒருவர் கூறுகிறார். அதைக்கேட்டு கதிர் ஜனனி மீது செம கோபத்தில் உள்ளார்.
ஜனனி மதிவதனியை சந்தித்து VKவை இப்போதைக்கு வேறு ஏதாவது இடத்தில் மாற்ற வேண்டும் என்கிறார்.
அவரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ஜனனியை அடிக்க பாய்கிறார் கதிர். இதோ பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ,